ஈழத்தில் அவலங்கள்
எதையும் விட்டுவைக்கவில்லை
மரம், மாடு, வீடு
மாம்பிஞ்சு, குழந்தை குஞ்சு
சடப்பொருட்கள், மடம் கோவில்கள்
நுன்னுயிர்கள், கருவுயிர்கள் என்று
எதையுமே மிச்சம் வைக்காமல்
அனைத்துக்கும் சமமே என்ற பொன்னான வழியை
இன அழிப்பிலும், இழி வன்புணர்விலும் கடைப்பிடித்த
சிங்கள பயங்கரவாதத்தின்
கோர முகத்தின் ஆதாரங்களை,
உலகின் பல்வேறு நாடுகளும்
மானிடத்தின் முன்னேற்றத்திற்காய்
ஏதேதோ புதுமைகளைப் படைப்பதற்காய் ஆய்வு செய்து கொண்டிருக்க
சிங்களம் மட்டும்
சிறுவர்களின் உடலைக் கீறி
குழந்தைகளின் குடலை எடுத்து
செய்யும் ஆய்வுகளை
மனிதனை
பலவிதமான வடிவங்களில் வெட்டி
பலவிதமான விதங்களில் குத்தி எரித்து
கொல்லும் ஆய்வுகளை
பரிசோதனைக் குளாய்க் குழந்தையின்
நாளாந்த வளர்ச்சியை கணிப்பிடும் விஞ்ஞானி போல்
ஒருநாள் புதைத்த தமிழன் எப்படியிருப்பான்
ஒருவாரம் புதைத்த தமிழச்சி எப்படியிருப்பாள்
ஓருமாதம் புதைத்த குழந்தை - ஆண்குழந்தையென்றால் எப்படியிருக்கும்
பெண்குழந்தையென்றால் எப்படியிருக்கும்
ஒருவருடம் புதைத்த கிழவி எப்படியிருப்பாள் என்று
நாள் தோறும் புதைகுழி தோண்டி - சிங்களம் செய்யும்
சர்வதேச மனித நேய ஆராச்சிகளை
நாம் மட்டும் பார்த்து
நாம் மட்டும் கதறி கண்ணீர் விட்டு
நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொண்டிருக்காமல்
உலகம் முழுவதும் பார்க்க
அனைத்து சந்ததியும் பார்க்க
ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவாவின்
ஆரம்பமே இது
ஈழத்தின் வலிகளை, அவ் வலிகளின் ஆதாரங்களை, கிடைக்கக் கூடிய வளங்களை வைத்து ஆவணப்படுத்த முயல்கிறேன். தங்களால் ஆன உதவிகளையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.