Thursday, July 20, 2006

நீ்ங்களும் கைவிட்டு விட்டீரோ!!


கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன்
கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன்

படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன்
பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன்

இளகிய மனதது உங்களுக்குள்ளது
இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது

பச்சை இலையதன் காடுகள் காப்பவர்
பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர்

விலங்கை விடவும் கேவலமாகிய
விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது

பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது
பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது

நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது
நினைத்திடாத பல கேவலம் நடக்குது

உங்கள் கண்களில் ஏன்படவில்லை
உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை

எங்கள் இனமது ஏதிலியான
எதுவும் அடைந்திட அருகதையற்ற

செத்துப் போகவே பிறந்த இனமென்று
செய்வதென்ன இனிஇங்கு உள்ளதென்று

எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டால் பொதுமென்று
எண்ணி நீங்களும் கைவிட்டு விட்டீரோ

Thursday, July 13, 2006

தூக்கமா கண்மணி!

தூக்கமா கண்மணி பள்ளியெழு - உன்
தொட்டிலை விட்டு நீ துள்ளியெழு

இது ஒரு கவிஞரின் வரிகள்
இன்று ஈழத்திலே தூக்கம் என்பதே
அரிதான ஒன்றாகி விட்டது

ஆனால் மேலே படத்தில் உள்ளது போல்
நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்ட
எங்கள் கண்மணிகள் எண்ணிலடங்கா!

இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த
உலகமே உனக்குக் கண் இல்லையா?

Thursday, July 06, 2006

இப்படியும் ஒரு துயிலெழுப்பல்!!


காலையிலே துயிலெழுப்பி
காப்பித் தண்ணி போட்டுத்தந்து
பார்புகழ வாழ்வாய் என்று - தாய்
வாழ்தி வாழ்ந்த காலம் ஒன்று
ஈழத்திலே இருந்தது
அன்றொரு காலம்!


இன்று
கண்விழித்துப் பார்க்கும்போது
உயிரோடு எத்தனை உறவு
மீதமாக இருக்கிறது என்று
கணக்கு பார்க்க வேண்டி இருப்பதை
எண்ணிப்பார்த்தால்...
கண்ணயரகூட முடியாது!


ஈழத்து உறவுகள்
நின்மதியாக தூங்கி
இன்றோடு
பல பல தசாப்தங்கள்!!!


இனியேனும் ஒருநாள்
இன்னமும் எஞ்சியிருக்கும்
பிஞ்சுக் குழந்தைகள் - அதை
பெற்ற உறவுகள்
நின்மதியாய்க் கண்ணுறங்க
நேரம் கிட்டுமா?

Tuesday, July 04, 2006

மாணவன்!


தமிழ் மாணவர்கள் சிலர் இலங்கை இராணுவத்தால் கூட்டிச்செல்லப்பட்டனர். இறுதியில் கிடைத்தது இவன் மட்டும் தான், அதுவும் முழுமையாக இல்லை, இப்படி பாகம் பாகமாக சில பகுதிகள் மட்டுமே. மற்றைய மாணவர்களின் நிலை இன்னமும் தெரியவில்லை. (மட்டக்களப்பு வவுனதீவில்)

Sunday, July 02, 2006

இலங்கையில் சமத்துவம்!



சமத்துவம் தருகிறது சிங்கள அரசு!

சமத்துவம் என்றால்
சிங்களவருக்கும் தமிழருக்குமில்லை
அதைவிட மேலே போய்
விலங்குகளையும் சேர்த்து!

மாட்டுக்கும் மனிதனுக்கும்,
தமிழனாய் பிறந்துவிட்டால்
சாவினிலே சமத்துவம் தர
திறந்த மனதுடன் எப்போதும் தாயாராய் இருக்கிறது
சிறிலங்கா அரசு.

சும்மா சொல்வதில்லை
சிறிலங்கா அரசு,
சொல்லை செயலில் காட்டி
ஆதாரத்துடன் அழைக்கிறது
சமத்துவம் தர...!