Wednesday, June 28, 2006
கருகிடும் மலர்கள்!!!
நேற்றலர்ந்த மொட்டு ஒன்று
சருகாகிப் போனது!
இன்றுதித்த குழந்தை இங்கே
கருகாகிப் போனது!
பெற்றவரின் கனவுகளும்
உற்றவரின் உணர்வுகளும்
சொரணையற்ற சிங்களத்தால்
சிதையாகிப் போனது!
செந்தமிழர் சொந்தங்கள்
பந்தங்கள் பாசங்கள்
வஞ்சகரின் விளையாட்டில்
வெந்துபோய் கிடக்கிறது!!
இன்னும் இன்னும் எதனையோ
செல்லிச் சொல்லி உலகமும்
எம்தமிழர் வாழ்வு தனை
கேள்விக்குறி ஆக்குது - இன்னும்
இந்தக் குழந்தை போல
பல நூறு வேண்டும் என்று
உதவி பல செய்வதனால்
சிங்களத்தைக் கேக்குது!!
எம் அன்னை என்றிருந்த
இந்தியாவும் நோக்குது!
சிங்களவன் பேச்சை நம்பி
கைவிரிக்கப் பார்க்குது!!
தமிழகமும் மத்தியத்தின்
முடிவு தனைக் கேக்குது!!!
தன்னுடைய நலனை எண்ணி
நழுவுகின்ற போக்கிது!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment