Monday, June 26, 2006

இவர்களும் வாழக்கூடாதா?



இன்றைய சிறுவர்களே உலகின் நாளைய தூண்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிபர் அப்துல் கலாம் அவர்களே சிறுவர்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டுகிறார், அது சிறந்த தலைவருக்கு அடையாளம், சிறந்த கல்விமானுக்கு அடையாளம், சிறந்த மனிதாபிமானிக்கு அடையாளம்.

ஆனால் ஈழத்திலே தமிழ்ச் சிறுவர்களில் சிங்கள அரசு காட்டும் கரிசனை இதுதான். நாளை இவர்கள் வளர்ந்து சிறந்த அறிவாளிகளாகி விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது சிங்கள அரசு. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றையே கிழித்து கருவில் இருந்த குழந்தையைக் குத்திக் காலால் போட்டு மிதித்த சிங்கள இராணுவத்தின் தலைமை எவ்வளவு தூர நோக்கான சிந்தனையோடு(தமிழினத்தை அழிப்பதில்) செயல்படுகிறது.

3 comments:

Anonymous said...

உலகே உனக்குக் கண் இல்லையா?
எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா??

Jay said...

காலம் பதில் சொல்லும் அன்பரே!
எமக்கு தொடர்ந்தும் இந்நிலை நீடிக்காது!

தமிழினி said...

நன்றி மயூரேசன். உங்களைப் போல் தான் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.