ஈழத்தில் அவலங்கள்
எதையும் விட்டுவைக்கவில்லை
மரம், மாடு, வீடு
மாம்பிஞ்சு, குழந்தை குஞ்சு
சடப்பொருட்கள், மடம் கோவில்கள்
நுன்னுயிர்கள், கருவுயிர்கள் என்று
எதையுமே மிச்சம் வைக்காமல்
அனைத்துக்கும் சமமே என்ற பொன்னான வழியை
இன அழிப்பிலும், இழி வன்புணர்விலும் கடைப்பிடித்த
சிங்கள பயங்கரவாதத்தின்
கோர முகத்தின் ஆதாரங்களை,
உலகின் பல்வேறு நாடுகளும்
மானிடத்தின் முன்னேற்றத்திற்காய்
ஏதேதோ புதுமைகளைப் படைப்பதற்காய் ஆய்வு செய்து கொண்டிருக்க
சிங்களம் மட்டும்
சிறுவர்களின் உடலைக் கீறி
குழந்தைகளின் குடலை எடுத்து
செய்யும் ஆய்வுகளை
மனிதனை
பலவிதமான வடிவங்களில் வெட்டி
பலவிதமான விதங்களில் குத்தி எரித்து
கொல்லும் ஆய்வுகளை
பரிசோதனைக் குளாய்க் குழந்தையின்
நாளாந்த வளர்ச்சியை கணிப்பிடும் விஞ்ஞானி போல்
ஒருநாள் புதைத்த தமிழன் எப்படியிருப்பான்
ஒருவாரம் புதைத்த தமிழச்சி எப்படியிருப்பாள்
ஓருமாதம் புதைத்த குழந்தை - ஆண்குழந்தையென்றால் எப்படியிருக்கும்
பெண்குழந்தையென்றால் எப்படியிருக்கும்
ஒருவருடம் புதைத்த கிழவி எப்படியிருப்பாள் என்று
நாள் தோறும் புதைகுழி தோண்டி - சிங்களம் செய்யும்
சர்வதேச மனித நேய ஆராச்சிகளை
நாம் மட்டும் பார்த்து
நாம் மட்டும் கதறி கண்ணீர் விட்டு
நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொண்டிருக்காமல்
உலகம் முழுவதும் பார்க்க
அனைத்து சந்ததியும் பார்க்க
ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவாவின்
ஆரம்பமே இது
ஈழத்தின் வலிகளை, அவ் வலிகளின் ஆதாரங்களை, கிடைக்கக் கூடிய வளங்களை வைத்து ஆவணப்படுத்த முயல்கிறேன். தங்களால் ஆன உதவிகளையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.
7 comments:
Nantri Sothara !!
Singalavan Sarvadhasathin mandaiya Kuluva eadukira muyathikali mureiyadaika engalaal eanthari saiyanum ...
Eanidam ulla silla vallikalin thokupokali tharukiran viraivill>>>>.....
நன்றி anonymous, தங்களால் இயன்றளவு பலரின் கவனத்திற்கும் இவ் வலைப்பதிவினை எடுத்துச் செல்ல தங்களால் ஆண முயற்சிகளை எடுத்துதவுவீர்கள் என நம்புகின்றேன். தங்களிடமுள்ள ஆவணங்களை மிக ஆவர்த்துடன் எதிர்பார்க்கிறேன்.
//கற்பழிப்பிலும் //
பலவந்தமாக ஒருவர்மீது ஏவப்படும் வன்முறையை கற்பழிப்பு என்று சொல்வதும் ஒரு வன்முறையே..
பாலியல் வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி - இந்தச் சொற்களையே பாவியுங்கள்.
ஈழப் பத்திரிகைகள் இச் சொற்களையே பாவிக்கின்றன என்பதோடு இது மிக அவசியமானது.
அல்லது ஒரு மோசமான வன்முறையைக் கூறுகிற நீங்களே சொற்களால் மீள அதை நிகழ்த்துவதுபோல ஆகும்!
let the international community know....
மிக மிக நன்றி பொடிச்சி
முக்கியமான ஒரு விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். "அழிப்பிலும்" என்ற சொல்லின் தொடர்ச்சியில், எழுத்தோட்டத்தில் இச்சொல்லும் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதனையிட்டு வருந்துகின்றேன்.
திருத்துகின்றேன்.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
எம் அவலத்தையும் யாவரும் அறிய, அதன் மூலம் அம்மக்களுக்கும் ஒரு அமைதி பிறக்க தங்களால் ஆணவற்றை செய்ய உங்ளைப்போன்ற நல் உள்ளங்கள் தயங்காது என எதிர்பார்க்கிறேன்.
நல்லதொரு முயற்சி .
Post a Comment